உலகில் அதிகம் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்களை அல்லது நிகழ்வுகளை பக்கச்சார்பின்றி நோக்கினால் முஹம்மத் (ஸல்) அவர்கள் முதன்மை இடத்தில் இருப்பதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அவர் உலகத்தவர்களுக்கு ஓர் அருட்கொடையாக வந்த அல்லாஹ்வின் தூதராவார்.
எனவே நாம் நபியவர்களை நேசிக்க வேண்டும். அவருடைய நற்பெயருக்கு களங்கமேற்படுத்தி அவரையும் அவர் சார்ந்தோரையும் கொச்சைப்படுத்தி அகௌரவப்படுத்தும்போது அதற்கெதிராக அறிவுபூர்வமாகவும், சட்டத்திற்கும் ஒழுங்குக்கும் உட்பட்ட வகையிலும், சாத்வீகமான அனைத்து வழி முறைகளையும் பயன்படுத்தி எமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
இதனைத் தான் இஸ்லாமிய ஷரீஆ எம்மிடம் வேண்டி நிற்கிறது. மாற்றமாக எமது நடவடிக்கைகள் காரணமாக அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கமும் இகழ்ந்துரைக்கப்பட நாம் காரணமாக அமையக் கூடாது.
நபிமார்களோடு முறைகேடாகவும் பொருத்தமற்ற முறையிலும் வரலாறு நெடுக சில அறிவீனர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். இது அல்லாஹ்வின் நியதியுமாகும். அனைத்து நபிமார்களும் இவ்வாறான நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னர் பல ரஸூல்மார்கள் பொப்பிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் பொறுமையோடு இருந்தனர். எமது உதவி வரும் வரை அவர்கள் நோவினை செயப்பட்டார்கள்’். (அல் அன்ஆம்: 34)
முஹம்மத் (ஸல்) அவர்களும் அவரது குடும்பத்தவர்களும் அவரைப் பின்பற்றிய தோழர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்கள் அநீதியிழைக்கப்பட்டனர். அவரைப் பின்பற்றியோர் பட்டினியில் போடப்பட்டனர். அவரது மனைவியைக் கூட விட்டுவைக்கவில்லை. அவருக்கும் அவதூறு கூறினர். நாம் அனைத்து நபிமாருக்கும் மனித ஜின் ஷைத்தான்களை எதிரிகளாக ஆக்கினோம்" (அல் அன்ஆம்: 112)
நாம் அனைத்து நபிமாருக்கும் குற்றவாளிகளை எதிரிகளாக ஆக்கினோம்"’ (புர்கான்:31) என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே இது மறுமைநாள் வரை தொடரக்கூடிய ஒன்று. இவ்வாறு நிகழ்ந்தமைக்காக நாம் ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு பயனில்லை. இதற்கு எதிராக அறிவுபூர்வமாக தொடராக திட்டமிட்டு செயற்பட வேண்டும்.
இச் சந்தர்ப்பத்தில் நாம் எவ்வாறு செயற்பட முடியுமென்று சிந்திப்போம்.
நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளல்
அவர் யார்? அவரது தா தந்தையின் பெயர் என்ன? அவரது குடும்பத்தவர்கள் யார்? அவரது பிறப்பு, கோத்திரம் என்பன பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவர் மிகச் சிறந்த கோத்திரத்தில் மிகச் சிறந்த பரம்பரையில் பிறந்தார்கள்.
பின்னர் அல்லாஹ் மிகச் சிறந்த கோத்திரத்தை தெரிவு செது அதில் என்னை பிறக்கச் செதான். அவர்களில் சிறந்த மனிதன் நான்தான். சிறந்த வீடு எனது வீடு தான்" அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி)
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரை அறிந்து கொள்ளல்
அவரது மனைவியர்கள், பிள்ளைகள், குடும்பத்தவர்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் அவரது குடும்பத்தவர்களை அனைத்து தவறுகளில் இருந்தும் தூமைப்படுத்தியுள்ளான். நிச்சயமாக அல்லாஹ் நபியின் குடும்பத்தவராகிய உங்களை உங்கள் தவறுகளில் இருந்து தூமைப்படுத்தி அழுக்குகளை போக்கவே விரும்புகின்றான்’. (அஹ்ஸாப்: 33)
நபி (ஸல்) அவர்களின் பண்புகளை விளங்கிக் கொள்ளல்
அவரது உடலமைப்பு குணவியல்புகளை அறிந்து கொள்ளல் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வத்தின் முன்பும் பின்பும் தோற்றத்தில் அழகானவராகவும் பண்பாட்டில் சிறந்தவராகவும் காணப்பட்டார்கள்.
‘’நிச்சயமாக நீங்கள் உன்னதமான பண்பாடுள்ளவராக காணப்படுகின்றீர்கள்’ (அல்கலம்: 4) என்று அல்லாஹ்வே சான்று பகர்கின்றான்.
நபியவர்களோடு பண்பாடாக நடந்து கொள்ளல்
பெற்றோர், ஆசிரியருக்கு முன்னால் பணிவோடு நடப்பது போன்று நாம் நபியவர்களோடும் பண்பாக நடக்க வேண்டும். அவரது பெயரை மாத்திரம் வெறுமனே சோல்லக் கூடாது. அவரது வழிகாட்டல்களை விட எமது கருத்துக்களை முற்படுத்த கூடாது. உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பது போன்று நபியின் அழைப்பை கருதவேண்டாம்" (அந்நூர்: 63)
ஈமான் கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலை விட உயர்த்த வேண்டாம். நீங்கள் உங்களிடையே பேசுவதைப் போன்று உரத்த குரலில் நபியிடம் பேசி உங்களது அமல்களை வீணாக்கிக் கொள்ளவும் வேண்டாம்" (அல் ஹுஜ்ராத்: 2)
நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படல்
நபியவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையான ஒரு விடயமாகும். மேலும் நபிக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதுமாகும். யார் ரஸூலுக்கு கட்டுப்படுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராவார்’. (அந்நிஸா:80)
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதா இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்களது பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும் மிக்க அன்புள்ளவனாகவும் இருக்கிறான் என்று நபியே நீங்கள் சோல்லுங்கள்" (ஆல இம்றான்: 31)
சஹாபாக்கள் இதனை செயல் ரூபத்தில் செது காட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்களை வாழ்வின் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக எடுத்தல்
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி அவனை அதிகமாக திக்ர் செகின்றவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி காணப்படுகிறது" (அஹ்ஸாப்: 21)
அவர் விரும்புபவற்றை நாம் விரும்ப வேண்டும். அவர் வெறுப்பவற்றை நாம் வெறுக்கவேண்டும்.
நபி (ஸல்) அவர்களை உளப் பூர்வமாக நேசிக்க வேண்டும்
இதன் மூலம்தான் எமது ஈமானை பூரணப்படுத்திக் கொள்ளமுடியும்.
ஒருநாள் நபி (ஸல்) அவர்களின் பணியாளர் ஸௌபான் (ரலி) அவர்களது நிறம் மாறிப் போயிருந்தது. அப்போது நபியவர்கள் அதற்கான காரணத்தை கேட்டபோது ‘நீங்கள் சுவர்க்கத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பீர்கள் ஆனால் நாங்கள் தாழ்ந்த இடத்தில் தான் இருப்போம். உங்களது பிரிவை எப்படித்தான் தாங்கிக் கொள்வது என்ற நினைவு என்னை ஆட்கொண்டது’ என்று கூறிய போது நபி (ஸல்) அவர்கள்: ‘’மனிதன் யாரை நேசிப்பானோ அவனோடு (சுவனத்தில்) இருப்பான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) ஆதாரம்:புஹாரி (6168))
நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத் கூறுதல்
இதன் முலம் அதிக நன்மையும் நபியின் தோழமையும் கிடைக்கிறது. யார் என் மீது ஸலவாத் கூறுகிறாறோ அல்லாஹ் என்னை அவரோடு இணைத்து வைப்பான். அவருக்கு நான் ஸலாம் கூறுவேன்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: அபூ தாவூத் (2041))
நபி (ஸல்) அவர்களை பாதுகாத்தல்
இஸ்லாத்தின் எதிரிகள் எப்போதும் நபி (ஸல்) அவர்களை கொச்சைப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். இது ஒரு புதிய விடயமன்று. வரலாறு நெடுக இவ்வாறான காட்சிகளை நாம் காண முடியும். நபி (ஸல்) அவர்களை திட்டினார்கள், துன்புறுத்தினார்கள், பொருளாதாரத் தடை விதித்தார்கள், வசைபாடினார்கள்.
எனவே நாம் நபி (ஸல்) அவர்களை அறிந்து கொள்வோம். அனைவருக்கும் அவரை அறிமுகம் செவோம்
No comments:
Post a Comment